directly

img

நேரடியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை சேலத்தில் பழைய பேருந்து அருகில் உள்ள கடை வீதியில் துவக்கினார். நடந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஒவ்வொரு கடைகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு கடையின் உரிமையாளரிடம் பிரச்சார நோட்டீசுடன் பணத்தை வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.