tamilnadu

தேர்தல் பறக்கும் படை சோதனை

சென்னை, ஏப்.7-தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வரும் தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், தங்கம், வெள்ளிப் பொருட்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் போளூர்-சேத்துப்பட்டு சாலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எடுத்துவரப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக கைப்பற்றப்பட்டன. வாகனத்தை ஓட்டி வந்த ரவிச்சந்திரனிடம் நடந்த விசாரணையில், ஜெலட்டின் குச்சிகளை ஆவனியாபுரத்திற்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.


23 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட சுமார் 5 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றினர்.திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அந்தவழியாக சென்ற லோடு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, முட்டை வியாபாரியிடம் 4 லட்சத்து 96 ஆயிரத்து 140 ரூபாய் இருந்தது. கேரளாவுக்கு லோடு இறக்கிவிட்டு நாமக்கல் திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பணத்துக்கு உரிய ஆவணமில்லாததால், அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் காங்கயம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

;