world

img

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  

ஜப்பானில் நேற்று இரவு 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தலைநகர் டோக்கியாவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் ஃபுகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே உள்ளூா் நேரப்படி புதன்கிழமை இரவு 11:36 மணிக்கு கடலுக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா நகரின் வடக்கே செண்டாய் பகுதியில் புல்லட் ரயில் ஒன்று தடம் புரண்டது. மேலும் டோக்கியோ உட்பட கிழக்கு ஜப்பானில் உள்ள பல பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதனைதொடர்ந்ந்து டோக்கியோ சுற்றியுள்ள சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.  

இந்த நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா கடற்கரை பகுதிகளில் அலைகள் உயரமாக எழுந்து காணப்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கடலில் 3 மீட்டர் உயரத்துக்கு பேரலைகள் எழும்பியதாக தெரிகிறது.  

கடந்த 2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18,500 பேர் உயிரிழந்தனர். அப்போது ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. அது இப்போதும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

;