world

img

நிதிப் பற்றாக்குறையால் 45 விழுக்காடு அமெரிக்கர்கள் தவிப்பு

வாஷிங்டன், டிச.7- அண்மையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் தங்கள் குடும்பங் கள் கடுமையான நிதி நெருக்க டியை அனுபவித்து வருவதாக அமெ ரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலப் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. விலை உயர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்பில் பத்து விழுக்காட்டினர் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அதோடு, குறைவான வருமானம் ஈட்டும் பகுதியினரின் நிலைமையும் மோசமாக இருக்கிறது. விலை உயர்வால் தங்கள் குடும்பங்கள் நிதி  நெருக்கடியில் சிக்கியுள்ளன என்று 45 விழுக்காட்டினர் தெரிவித்திருக் கின்றனர்.

ஆண்டுக்கு 40 ஆயிரம் டாலர் வருமானத்தை ஈட்டும் குடும்பங்கள் நெருக்கடியை சந்தித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பிரிவி னரில் 71 விழுக்காட்டினர் நெருக்கடி யில் சிக்கியிருக்கிறார்கள். ஆய்வில் கருத்து தெரிவித்தவர்களில் 28 விழுக்காட்டினர், தாங்கள் தற்போது அனுபவித்து வரும் தரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை யில் இருப்பதாகக் கருத்து தெரி வித்துள்ளனர்.  நடுத்தர வருமானக் குடும்பங்க ளும் இந்த நெருக்கடியில் இருந்து தப்பவில்லை. இதில் 47 விழுக்காட்டி னர் அதிருப்தியைத் தெரிவித்தி ருக்கிறார்கள். உயர் வருமானக் குடும்பத்தினரில் ஒரு சிறு பகுதி யினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரையும் இந்த விலையுயர்வு பாதித்திருக்கிறது என்பதை ஆளும் ஜனநாயகக் கட்சியி னரும் ஒப்புக் கொள்கிறார்கள்.  இந்த ஆய்வு நவம்பர் 3 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையி லான காலகட்டத்தில் நடத்தப்பட்டது. நுகர்வோர் விலைக்குறியீட்டின்படி நடப்பு நிதியாண்டில் 6.2 விழுக்காடு உயர்வு ஏற்பட்டிருக்கிறது. 

பைடன் காரணமல்ல

இந்த விலை உயர்வுக்கு பைடன் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும், கொரோனா தொற்றுதான் விலைகள் உயரக் காரணம் என்று அவரது ஆலோசகர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆலோசகர்களின் ஒருவரான பிரியன் டீஸ், “விலைகளின் உயர்வு கடுமையாக உள்ளது என்பது உண்மை தான். மக்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் பணத்தின் இருப்பை அது பாதிக்கிறது” என்கிறார்.
 

;