world

img

விண்வெளியில் சினிமா தியேட்டர் , பார், நூலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உருவாகும் விடுதி 

சினிமா தியேட்டர், பார்,  நூலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 400 அறைகள் கொண்ட விடுதி விண்வெளியில் உருவாகி வருகிறது.

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின் விடுதியின் கட்டுமானப் பணிகள் 2025ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த குழுவில் நாசா வீரர்கள், விமானிகள், பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் உள்ளனர். 

விண்வெளி விடுதி ஒரு பெரிய வட்ட வடிவமாகவும் மற்றும் செயற்கை ஈர்ப்பை உருவாக்க சுழலும், இது சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு சமமாக அமைக்கப்படும்.
இந்த விடுதியில் தங்கும் அறைகள், நூலகங்கள் ,சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என ஏராளமான வசதிகள் உள்ளன.  ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதி கொண்ட இந்த விடுதி கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இந்த விடுதி ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் உலகை சுற்றும் வகையில் இருக்கும் .
பணிகள் நிறைவுற்ற பின் இது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிடம் விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2025ல் கட்டுமானப் பணிகள் முடிந்தாலும் 2027ம் ஆண்டு முதல்தான் மனிதர்கள் செல்லமுடியும் என்று ஆர்பிட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

;