- உக்ரைனுக்கு போர்க்கால நிதியாக 40 பில்லி யன் டாலர்கள் அளிப்பதை அமெரிக்க நாடாளு மன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் உள்நாட் டில் கோவிட் நிவாரணத்துக்கு முன்னுரிமை இல்லை. வெளிநாடுகளின் நிதியை திருடுவது மேற்கத்திய நாடுகளுக்கு பழக்கமாக ஆகிவிட் டது என ரஷ்யா வெளியுறவு அமைச்சர் லவ்ரவ் குற்றம்சாட்டியுள்ளார்.
- முதலில் ஆப்கானிஸ்தா னின் நிதியையும் இப்பொழுது ரஷ்ய நிதியை யும் திருட முயல்கின்றனர் என்பது அவரது குற்றச்சாட்டு. உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு செல்லும்
- ரஷ்ய எரிவாயுவை உக்ரைன் நிறுத்திவிட் டது. இது யாருக்கு நட்டம்? உக்ரைன் வருமானத் துக்கா? ரஷ்யாவுக்கா? ஐரோப்பாவுக்கா? என்பது தெரியவில்லை.
- டோன்பாஸ் பகுதியை மீட்பதுடன் ரஷ்யா நிற்கப் போவது இல்லை எனவும் கருங்கடல் மற்றும் மால்டோவாவின் டிரான்சிட்டிரியா தீவு வரை புடின் ஆக்கிரமிக்க முயல்கிறார் எனவும் அமெ ரிக்க உளவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தடைகள் ரஷ்யாவைவிட அமெரிக்காவுக்கே அதிகம் பாதிப்புகளை உருவாக்குகிறது என அமெரிக்க மக்கள் 52% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- “டெமாக்ரசி இன்ஸ்டியூட்” எனப்படும் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் உக்ரைன் தோற்றால்தான் எங்களது பிரச்சனை தீரும் எனில் உக்ரைன் தோற்றாலும் பரவாயில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
- ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக டென்மார்க்கில் பணவீக்கம் கடந்த 38 ஆண்டு களாக இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அக்டோபரில் வரவுள்ள குளிர்காலத்தில் பிரிட்ட னில் உள்ள 1கோடி ஏழைக் குடும்பங்கள் வீடு களில் சூட்டை உருவாக்க தேவையான எரிசக்தி இல்லாமல் கடும் பிரச்சனைகளை சந்திக்க போகி ன்றனர் என முக்கிய மின்சார நிறுவனத்தின் அதி காரி கீத் ஆண்டர்சன் அபாய மணி அடித்துள் ளார்.
- பிரிட்டனின் ஸ்கை நியூஸ் எனும் ஊடகம் ஐ.நா. வுக்கான ரஷ்யா துணைத் தூதர் டிமிட்ரி பொலி யான்ஸ்கியை பேட்டி கண்டது. அப்பொழுது அவர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாஜிக் களை ஆதரிக்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டிய வுடன் திடீரென அந்த பேட்டியை நிறுத்திவிட்ட னர். மேற்கத்திய ஜனநாயகம் இதுதானா?