world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக உணவுப் பொருட்களை கப்பல்கள் மூலம் கொண்டு செல்வ தற்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்பந்தம் செய்துள் ளன. இதற்கு ஐ.நா.வும் துருக்கியும் முன்முயற்சி செய்தன.
  2. ரஷ்யாவும் உக்ரைனும் ஐ.நா.வுடன் தனித்தனியாக ஒப்பந்தங்களில்  கையெழுத்து போட்டுள்ளன. போர் அழிவுக்கு இடையே ஒரு நம்பிக்கைக் கீற்று!
  3. அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுத்த அதி நவீன துல்லிய ஹிமார்ஸ் எனப்படும் சிறிய ரக ஏவுகணை ஏவும் வாகனங்களை ரஷ்யா அழித்துள்ளது.
  4. அமெரிக் காவுக்கு இது அதிர்ச்சி!  உக்ரைனுக்கு ஆதரவாகப் போரிட வரும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்த பணியை ஒருங்கிணைக்கும்  டேமியன் மக்ரவ் என்ப வர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
  5. மேற்கத்திய ஜனநாய கமா? உயிரா? எனில் உயிர்தானே முக்கியம்!
  6. பல மேற்கத்திய ஊடகங்கள் தமது கவனத்தை உக்ரைன் போரிலிருந்து வேறு செய்திகளுக்குத் திருப்பியுள்ளன. செய்தியை காசாக மாற்றுவது தானே முதலாளித்துவ ஊடகங்களின் இலக்கு!
  7. ஜெர்மனி மக்கள், ரஷ்ய எரிசக்தி இல்லாமல் தமது குளியல் நேரத்தையும் துணி துவைக்கும் நேரத்தை யும் குறைத்துக் கொண்டுள்ளனர்.
  8. ஆனாலும் ரஷ்யா வை சிதைக்க வேண்டும் என ஜெர்மனி அரசி யல்வாதிகள் எண்ணுகின்றனர். உக்ரைன் போர் காரணமாக வரலாற்றில் முதல் முறை யாக சுவிட்சர்லாந்தில் மின்வெட்டு உருவாகும்  என அஞ்சப்படுகிறது. ஆல்ப்ஸ் மலை தேசத்துக்கு இப்படி ஒரு சோதனையா!
  9. உக்ரைன் மற்றும் தைவான் பதற்றம் காரணமாக சீனா வுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகியுள்ள நெருக்கம் கவலை தருவதாக ஜப்பான் அஞ்சுகிறது.
  10. ஆனாலும் ஜப்பான் அமெரிக்காவை நெருங்கும். மற்றவர்கள் கவலை அடையக்கூடாது போலும்!
  11. ரஷ்யா இல்லாமல் ஐரோப்பாவின் எரிசக்தி பாது காப்பு சாத்தியமே இல்லை என ஹங்கேரி கூறுகிறது. இதனால் ரஷ்ய எதிர்ப்பு ஐரோப்பிய தலைவர்கள் எரிச்சலில் உள்ளனர்.
  12. நீண்ட தூர இலக்கை தாக்கும் நவீன துப்பாக்கிக்கு “ஸ்நிப்பர்” என பெயர். உலகிலேயே அதிக தூரம் அதாவது 4.2 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஸ்நிப்ப ரை ரஷ்யா உக்ரைனில் பயன்படுத்துகிறது என டாஸ் பத்திரிகை கூறியுள்ளது.