- ‘‘எங்களுடன் இருங்கள்! இல்லாவிடில் நீங்கள் எங் களுக்கு எதிரிகள்தான்!’’ எனும் ஒரே ஒரு கொள்கை யைதான் மேற்கத்திய நாடுகள் கொண்டுள்ளனர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் கூறியுள்ளார்.
- யார்தான் இதனை மறுக்க முடியும்? பிரிட்டன் பிரதமர் பதவியை இழக்கப் போகும் போரிஸ் ஜான்சன் நேட்டோ தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது என செய்திகள் கசிந்துள்ளன.
- இது நடந்தால் நேட்டோவின் வன்மம் அதிகரிக்கும்! வரப்போகும் குளிர்காலத்துக்குள் உக்ரைன் தான் இழந்த பகுதிகளை மீட்க முடியாவிட்டால் போர் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க நாடாளுமன்ற ராணுவ குழு தலைவர் ஆதம் ஸ்மித் கூறியுள்ளார். எனவே, உக்ரைனுக்கு நீண்ட தூரம் தாக்கும் ஆயுதங்கள் தருவதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார்.
- எந்த அமெரிக்க தலைவரும் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதில்லை போலும்! துர்க்கியே உக்ரைனுக்கு நிறைய ட்ரோன் விமானங் களை விற்றுள்ளது. இவற்றில் சிலவற்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதே சமயம் இப்பொழுது ரஷ்யாவும் துர்க்கியேவின் ட்ரோன்களை கோரு கிறது என எர்டோகன் தெரிவித்துள்ளார்.
- இது உக்ரைனுக்கு மேலும் கிலியை ஏற்படுத்தும். அமெரிக்கா தந்த ஹிமார்ஸ் ராக்கெட்டுகள் 100ஐ ரஷ்யா அழித்துள்ளது.
- அமெரிக்க மக்களின் வரிப்பணம் காற்றில் கரைகிறது. ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் கவலை கொள்ளத் தயாராக இல்லை. உக்ரைன் போரில் தத்தளிக்க, அதன் வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து கொண்டிருக்க, ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அவரது காதல் மனைவியும் ‘‘வோக்’’ எனும் இதழுக்கு ஆடம்பர புகைப்பட போஸ் தந்துள்ளனர்.
- இது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஐரோப்பா உக்ரைனுக்கு ஆயுதங்களை தந்துள் ளது; ரஷ்ய ராணுவம் பற்றிய உளவு செய்திகளை தருகிறது;
- ஐரோப்பிய ராணுவ அதிகாரிகள் போர்க் களத்தில் உக்ரைனுக்கு உதவுகின்றனர். இது போர் நடவடிக்கை இல்லையாம்! ரஷ்யா எரிசக்தியை குறைத்தால் உடனே ‘‘எங்கள் மீது ரஷ்யா பொருளாதார போரை அறிவித்துள் ளது’’ என ஐரோப்பா கூச்சலிடுகிறது. என்னே இரட்டை அணுகுமுறை!