world

img

உக்ரைன்-ரஷ்யா போர்க்களத் தகவல்கள்

  • உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 11 அரசியல் கட்சிகளை தடை செய்துள்ளார். இவற்றில் பல இடதுசாரிக் கட்சிகளும் அடங்கும். உக்ரைனின் அனைத்து தொலைக் காட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே அமைப்பாக மாற்றியுள்ளார். அரசின் தகவல்கள் தவிர வேறு செய்தி வெளியிடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. இத்தகைய கேலிக்கூத்தான ஜனநாயகத்தை நிலை நிறுத்தவே நேட்டோ உக்ரைனை ஆதரிக்கிறது போலும்!
  • இஸ்ரேலில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் இஸ்ரேல் அரசாங்கம், உக்ரைன் நாஜிக்களுக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என வற்புறுத்தியுள்ளன.
     
  •     தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது நேட்டோவில் இணைக்க மாட்டோம் எனவும் ஆனால் பொது வெளியில் உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் உண்டு எனவும் அமெரிக்கா கூறியதாக ஜெலன்ஸ்கி வேறு வழியின்றி அம்பலப்படுத்தியுள்ளார். இணைப்போம் அல்லது இல்லை என தெளிவான பதிலை வெளிப்படையாக சொல்லுமாறும் ஜெலன்ஸ்கி வற்புறுத்தியுள்ளார்.
  •     உக்ரைனின் டோனட்ஸ்க் பகுதியில் உக்ரைன் குண்டுவீச்சில் இரண்டு சீன பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர்.
  •     உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து பிலிப்பைன்ஸ் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி: “எண்ணெய்+ போர் லாபம்= போரை உருவாக்கு; மற்றவர்கள் மீது பழிபோடு!”
  •     போரில் காயமடைந்து உக்ரைன் மருத்துவமனைகளில் உள்ள ரஷ்ய ராணுவ வீரர்களின் “ஆண்மையை களையும்” சிகிச்சையை செய்யுமாறும் ஏனெனில் அவர்கள் மனிதர்கள் அல்ல; கரப்பான் பூச்சிகள்” எனவும் தங்களுக்கு கூறப்பட்டதாக ஒரு உக்ரைன் மருத்துவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
  •     துருக்கி தன்னிடம் உள்ள எஸ். 400 எனும் ரஷ்ய ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு தந்து உதவினால் துருக்கிக்கு எதிராக விதித்துள்ள தடைகள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. தான் நேரடியாக தலையிடாமல்மற்றவர்களை போரில் பலியிட அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்துவருகிறது.
  •     மரியபோல் பகுதியில் ரஷ்ய கருங்கடல் கப்பற்படையின் உதவி கமாண்டர் கேப்டன் ஆண்ட்ரூ, உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்டார். போரில் உயிரிழக்கும் 5வது மிகப்பெரிய ரஷ்ய ராணுவ அதிகாரி இவர். 
  •     டென்மார்க்கிலிருந்து உக்ரைனுக்கு ஆதரவாக போரிடச் சென்ற ஹாரி வெர்மீர் எனும் ராணுவவீரர் சில நாட்களிலேயே திரும்பிவந்துவிட்டார். ஒரு பொய்யானஅமைப்பால் தான் ராணுவ பணியில் இணைக்கப்
  • பட்டதாகவும் தனக்கு எவ்வித ஆயுதங்களையும் வழங்கவில்லை எனவும் அதனால் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறினார். இப்படி பலர் திரும்பியுள்ளனர்.
  •     உக்ரைன் நேட்டோவில் சேராமல் நடுநிலை எடுக்கும் சமரசத்தை பரிசீலனை செய்ய தயாராக இருக்கும் அதே நேரத்தில் கிரிமீயா/ டோன்பாஸ் பகுதிகளை விட்டுத்தரும் சமரசம் சாத்தியமில்லை என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். அதே சமயம் இந்த பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்காமல் உக்ரைனுடன் சமரசம் சாத்தியமில்லை எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
  •     பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் பாதுகாப்பு படையில் இருந்த ஒரு ராணுவவீரர் உக்ரைனுக்கு போரிட அனுமதியின்றி சென்றார். அங்கிருக்கும் சூழல்கள் காரணமாகவும் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாகவும் பிரிட்டன் திரும்பிய இவரை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்துள்ளது.
  •     ஜெர்மனியிலும் பிரான்சிலும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் பெரும் பேரணியை நடத்தியுள்ளன. இத்தாலியின் பைசா நகர விமான நிலையத்தில் உக்ரைனுக்கு செல்லும் நிவாரணப் பொருட்கள் அடியில் ஆயுதங்கள் மறைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன என்பதை கண்டித்து ஏராளமான ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  •     உக்ரைனின் சில முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள்நுழைந்தால் ரசாயன தாக்குதலை நடத்த ராணுவத்தில்உள்ள நாஜிக்கள் மற்றும் வலதுசாரிகள் திட்டமிட்டு வருவதாக டாஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.
  •     உக்ரைனின் பல பகுதிகளில் ஊழியர்களுக்கு அரசாங்கம் ஊதியம் தர இயலவில்லை. இதனால் ஊழியர்கள் கடும் துன்பப்பட்டனர். இந்த பகுதிகளுக்கு ரஷ்யா ராணுவம் சுமார் 400 டன் உணவு பொருட்களை நிவாரணமாக தந்துள்ளது.
  •     இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிபேசிய நிகழ்வை இஸ்ரேலிய-அரேபிய உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்த போரை திணித்தது நேட்டோ
  • தான் எனவும் அவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

அ.அன்வர் உசேன்