world

img

உக்ரைன்-ரஷ்யா போர்

  1. இரு தேசங்களிடையே ஒப்பந்தம் உருவானால் அது  ரஷ்யாவின் சரணாகதி தொடர்பாகத்தான் இருக்கும் என உக்ரைன் அதிரடி காட்டியுள்ளது. அமெரிக்க மற்றும் பிரிட்டன் தலைவர்கள் ஜெலன்ஸ்கியை சந்தித்த பின்னர் இந்த நிலைப்பாடு! ஆனால் கள நிலவரம் வேறுமாதிரியாக உள்ளது என பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹங்கேரி உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க திட்டமிடுகிறது என உக்ரைன் பகீர் குற்றம் கூறி யுள்ளது.  
  2. மறுபுறத்தில் அமெரிக்காவின் உதவியுடன்  போலந்து உக்ரைனில் உள்ளே நுழைவதற்கு திட்ட மிடுகிறது எனவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்து ள்ளதாகவும் ரஷ்ய உளவுத்துறை கூறுகிறது.  உக்ரைனில் செயல்பட்ட உயிரி பரிசோதனை கூடங் களில் அமெரிக்க கம்பெனிகளும் பெண்டகனும் ஈடு பட்டிருந்தன என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன என ரஷ்யா கூறியுள்ளது.
  3. இத்தாலிய அமைச்சர் ராபர்டோ சிங்கோலனி இத்தாலிய நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய்யை ரூபிள் மூலம் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். தான் உறுதி அளித்தவற்றில் 80% நவீன பீரங்கிகளையும்  டாங்கிகளை அழிக்கும் ஜாவ்லின் எனப்படும் 5000 ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு தந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இன்னும்  தரப்போவதாகவும் கூறியுள்ளது. பிரிட்டனும் அவ்வாறே வாக்குறுதி அளித்துள்ளது.
  4. இந்த பின்ன ணியில் உக்ரைன் எப்படி போர் நிறுத்தத்துக்கு முன் வரும்? அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனங்கள் ரஷ்ய படையினரின் நடமாட்டம் குறித்து உக்ரை னுக்கு  தகவல்கள் தருவதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் பத்திரிக்கை வெளிப்படுத்தி உள்ளது.
  5. இன்றைய சூழலின் துரதிர்ஷ்டவசமான அம்சம்  என்னவெனில்; பல அமெரிக்க தலைவர்கள் ரஷ்யா வை அழிக்க வேண்டும் என கூறிக்கொண்டிருக்கும் பொழுது பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனும்  குரலை டிரம்ப் வெளிப்படுத்து கிறார் என இடதுசாரி அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்ய வாசற்படியில் நேட்டோ குரைத்த காரணத்தால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்திருக்க வாய்ப்பு  உண்டு என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
  6. எனவே தான் தான் புடினை சந்திக்க விரும்புவ தாகவும் அவர் கூறியுள்ளார். பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உக்ரைன் பிரச்சனையில் நேட்டோ வுக்கு எதிராக பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி தலைவர் கீர் ஸ்ட்ராமர் கோபம் காட்டியுள்ளார்.