- அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஏராளமான நிதி உதவியும் ஆயுதங்களும் தந்த பின்னரும் இன் னும் நிறைய கொடுங்கள் என கோரிக்கை வைத் திருக்கிறார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்காவில் குழந்தை உணவு கடும் தட்டுப்பாடு காரணமாக நியூயார்க் மேயர் எரிக் ஆதம்ஸ் அவசர நிலை பிறப்பித்துள்ளார்.
- எனினும் பில்லியன் கணக்கில் உக்ரைனுக்கு பைடன் ஆயுதங்களை கொடுத்துக் கொண்டுள்ளார். ஆகஸ்டு மாதத்தில் போரின் திசை வழி மாறும் எனவும் டிசம்பரில் கிரீமியாவை கைப்பற்றும் எனவும் உக்ரைன் உளவுதுறை அதிகாரி கிரில் புடனோவ் கூறியுள்ளார். அதுவரை உக்ரைனுக்கு தோல்விதான் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறாரா?
- ரஷ்ய எண்ணெய்யை ரூபிள் மூலம் கொள்முதல் செய்ய மாட்டோம் என மார்தட்டிய பல்கேரியா மறுபரி சீலனை செய்யத் துவங்கியுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீது தடை பல இருந்தாலும் வரலாறு காணாத அளவுக்கு 62 மில்லியன் பேரல் ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது.
- மனித நாகரிகத்தை காக்க மிக விரைவில் புடின் தோற்கடிக்கப்பட வேண்டும் என பிரபல அமெரிக்க செல்வந்தர் ஜார்ஜ் சொரோஸ் கூறியுள்ளார்.
- “வெளிப் படையான சமூகத்துக்கு” ரஷ்யாவும் சீனாவும்தான் பெரிய எதிரிகள் எனவும் கூறினார். உண்மைதான்!
- சோசலிச சமூகத்தில் சொரோஸ்களுக்கு ஏது இடம்? ரஷ்ய எண்ணெய் வாங்கக் கூடாது எனில் அதற்கு மாற்றாக ரஷ்ய நிலக்கரியை பயன்படுத்த ஜெர்மனி ஆலோசிப்பதாக செய்திகள் கூறுகின்றன.
- ரஷ்யா வின் எண்ணெய் வேண்டாம்; ஆனால் ரஷ்யாவின் நிலக்கரி பரவாயில்லை! அமெரிக்காவை துதிபாட ஐரோப்பிய நாடுகள் படும்பாடு பரிதாபகரமானது!
- பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பதால் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க முடியவில்லை என டச்சு பிரதமர் மார்க் ரூட் அங்கலாய்த்துள்ளார். எரிசக்தி பிரச்சனையில் ரஷ்யா “பிளாக் மெயில்” செய்கிறது என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா லேயன் கூறியுள்ளார்.
- ரஷ்யாவின் எண்ணெய் வேண்டாம் என சொன்னது ஐரோப்பா தானே! ரஷ்யாவை பொருளாதார ரீதியாக நசுக்க முனைவர்களாம்! ஆனால் ரஷ்யா முணுமுணுக்காமல் எண்ணெய் தர வேண்டுமாம்! என்ன நியாயம்?