- அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு 40 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மிக குறைவாக உள்ளது. ரஷ்யா மீதான தடைகளின் விளைவு! பிரஸ்ஸல்ஸ் நகரில் விலை உயர்வுக்கு எதிராகவும் உக்ரைன் பிரச்சனையில் நேட்டோவின் தலை யீட்டைக் கண்டித்தும் தொழிற்சங்கங்கள் மாபெரும் பேரணி நடத்தியுள்ளன.
- உக்ரைனில் இன்னொரு முக்கிய எதிர்க்கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. இது, தடை செய்யப்படும் 11வது கட்சி. எனினும் உக்ரைன் ‘ஜனநாயக நாடு’ என மேற்குலக நாடுகள் சொல்லிக்கொண்டுள்ளன.
- சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தைவானை காக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
- மேற்கத்திய அரசாங்கங்கள் விரும்புவதை பேசு வதன் மூலம் ஆயுதங்கள் அதிகமாக கிடைக்கும் என நப்பாசை போலும்! ஜெர்மனியில் உற்பத்தியாளர் பணவீக்கம் 1949க்கு பின்னர் மிக அதிகமாக 33.6% உயர்ந்துள்ளது. எனினும் ரஷ்யாவை சிதைப்பது என்பதுதான் முக்கியம்!
- ரஷ்ய மீதான எண்ணெய் தடை காரணமாக நிலக்க ரிப் பயன்பாட்டுக்கு ஜெர்மனி திரும்புகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு முடிவுகள் எல்லாம் குப்பைத் தொட்டியில்!
- சுற்றுச் சூழல் மாசுபட்டாலும் ரஷ்யா தோற்க வேண்டும் என்ற ஐரோப்பாவின் குரூரமான எண்ணம். கருங்கடலில் உள்ள ரஷ்ய எண்ணெய்க் கிணற்றை உக்ரைன் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. மேற்குலக நாடுகளின் ஆயுதங்களின் பயன்பாடு!
- கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபிளின் மதிப்பு உயர்வு! மறுபுறத்தில் ஜோ பைடனின் அமெரிக்க மக்கள் ஆதரவு 29% ஆக சரிவு என கருத்துக் கணிப்பு!
- மேற்கு உக்ரைனில் உள்ள மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை தாக்க பயன்படும் ரஷ்ய விமானங்க ளை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்த வேண்டும் என போலந்து கூறியுள்ளது.
- ஐரோப்பா அமைதி யாக இருப்பது போலந்துக்கு பிடிக்கவில்லையோ?
- ரஷ்ய உணவுப் பொருட்களுக்கும் உரத்துக்கும் தடைகள் பொருந்தாது என ஐரோப்பிய ஒன்றி யத்தின் கொள்கை ஆணையர் ஜோசப் பொரேல் தெரிவித்துள்ளார்.
- தனக்கு தேவை எனில் தடைகள் வளைந்து கொடுக்க வேண்டும் என எண்ணும் ஐரோப்பாவின் இரட்டை நிலை!