world

img

போட்டியிட மாட்டேன்

டெல் அவிவ், ஜூலை 2- இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் நப்தாலி பென்னெட் தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை என்று அறிவித்துள்ளார். இஸ்ரேலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக பொதுத் தேர்தல் நடக்கப் போகிறது. பாலஸ்தீனம், மேற்குக் கரைப்பகுதி யில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் மதம் சார்ந்த  பிரச்சனைகளில் ஆகியவற்றில் எட்டுக் கட்சி கூட்ட ணியால் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடி யாமல் இருந்தது. சில நாடாளுமன்ற உறுப்பினர் கள் விலகியதால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.  இந்த எட்டுக் கட்சிக் கூட்டணியின் தோல்வி, முன் னாள் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ தலைமை யிலான வலதுசாரிக் கட்சிகளுக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.