world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் ராணுவ பயிற்சி மாஸ்கோவின் வடகிழக்கு பகுதியில் நடத்தப்பட்டது.
  2. மேற்கத்திய நாடுகளுக்கு இது எச்சரிக்கையா? இத்தாலியை தவிர அனைத்து நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை எதிர்க்கின்றன  என அந்நாட்டின் பிரதமர் மரியோ ட்ராகி கூறியுள்ளார்.
  3. ரஷ்ய ரூபிள்- சீனாவின் யுவான் வர்த்தகம் 1067% உயர்ந்துள்ளது என புளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.
  4. கிரீசின் எதிர்கட்சிகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கடுமையாக எதிர்த்துள்ளன. ரஷ்ய எரிசக்தி திட்டத்திலிருந்து விலகும் எண்ணம் இல்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
  5. ரஷ்யாவின் மீதான மேற்கொண்ட தடைகளை  நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே போடப்பட்ட தடைகளின் தாக்கம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பெல்ஜியம் கோரியுள்ளது.  
  6. ரஷ்ய எண்ணெய் தடையிலிருந்து சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விலக்கு அளித்துள்ளது.  
  7. ரஷ்யா கைப்பற்றிய மரியபோல் நகரில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. உக்ரைனிலிருந்து 60 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
  8. பல நாடுகள் இந்த அகதிகளை பராமரிக்க போதிய நிதி வசதி இல்லாமல் திணறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
  9. உள்ளூர் மக்களுக்கும் அகதிகளுக்கும் மோதல்களும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. முடக்கப்பட்ட ரஷ்ய நிதியை பறிப்பது என்பது சட்ட விரோதம் எனவும் அது பல சிக்கல்களை உருவாக்கும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையர் பவலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார்.