world

img

வர்த்தக பயன்பாட்டுக்கு டாலர் வேண்டாம் : ரஷ்யா-ஈரான் அதிரடி

தங்கள் இரு நாடுகளின் வர்த்தகத்தில் அந்நிய செலாவணியாகப் பயன்பட்டு வந்த அமெரிக்க டாலரை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்று ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் அறிவித்துள்ளன.

இது குறித்து ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "ஈரானுடனான வர்த்தகத்தில் டாலருக்கு இடமில்லை. கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 400 கோடி அமெரிக்க டாலருக்கும் மேல் இருந்தது. அமெரிக்க டாலரில்தான் இதுவரையில் கணக்கிட்டு வந்தோம். இனிமேல் அப்படி இல்லாமல் இரு நாடுகளின் வங்கி மற்றும் நிதித்துறைகளை இணைப்பதன் மூலம் அவரவர் நாணயங்களில் வர்த்தகம் செய்வோம் " என்றார்.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 31 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இரு நாடுகளும் ஒத்துழைத்தால் மேற்கத்திய நாடுகள் போட்டிருக்கும் தடைகளை உடைத்தெறிந்து விட முடியும் என்றும் பெஸ்கோவ் கூறியுள்ளார். இது தொடர்பான பல்வேறு உடன்பாடுகளில் இருநாடுகளும் விரைவில் கையெழுத்திடப் போகிறார்கள். அமெரிக்க டாலரின் பயன்பாட்டில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.