world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் பகுதியின் பெரும்பாலான இடங்களை ரஷ்ய ராணுவம் தன் கட்டுப்பாடின் கீழ் கொண்டு வந்துள் ளது என பல மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக் கின்றன.
  2. ரஷ்யா தோல்வியை சந்தித்து வருகிறது என கூறிய ஊடகங்கள் இன்று உண்மையை கூற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  
  3. டோன்பாஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு வீரர்கள் தாக்குதலில் இறந்ததாக ரஷ்யா  தெரிவித்துள்ளது. மிக அதிகமாக போலந்து வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
  4. நேட்டோ சுயநலத் துக்காக உயிரிழந்த இவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது?
  5. உக்ரைன் போர் சமாதான பேச்சு வார்த்தைகள் மூலமே முடிவுக்கு வரும் என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறி யுள்ளார். அவர்தான் சில வாரங்களுக்கு முன்னால் ரஷ்யாவை தோற்கடிக்கும் ராணுவ தீர்வுதான் போரை முடித்து வைக்கும் என கூறியிருந்தார்.
  6.  போரின் வெற்றி எத்தகையதாக இருக்கும் என உக்ரைன்தான் தீர்மானிக்கும் என அமெரிக்கா  செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள் ளார்.  
  7. தோல்வி முகத்தில் உள்ள உக்ரைன் எப்படி  போரின் முடிவை தீர்மானிக்கும் என எதிர் கேள்விகள் எழுந்துள்ளன.  
  8. பெலரஸ் பகுதியிலிருந்து தாக்குதல்கள் நடந்தன எனவும் போரில் பெலரஸையும் இழுக்க  ரஷ்யா  முயல்கிறது என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
  9. பல ஐரோப்பிய தேசங்கள் ரஷ்யாவுடன் நேரடி போரில் ஈடுபட்டுள்ளன எனவும் தாங்கள் அவர்களுடன் கை கோர்க்கவில்லை என்பதால் கோபமாக உள்ளனர் எனவும் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கூறியுள்ளார்.
  10.  தான் எரிசக்தி செலவை குறைக்க குளிக்கும் நேரத்தை குறைத்துவிட்டதாகவும் மக்களும் அதனை பின்பற்ற வேண்டும் எனவும் ஜெர்மனி யின் உதவி ஜானதிபதி ராபர்ட் ஹேபக் தெரி வித்துள்ளார்.
  11. அமெரிக்காவுக்காக குளியல் நேரத்தை கூட குறைக்கும் ஜெர்மனி அரசியல்வா திகளை பார்த்து சிரிப்பதா? அழுவதா?
  12. உக்ரைன் பின்னடைவு நேட்டோ ஒரு காகித  புலி என்பதை நிரூபித்துள்ளது என டேவிட் கோல்ட் மேன் எனும் அமெரிக்க பத்திரிக்கையாளர் கூறி யுள்ளார்.