world

img

இஸ்ரேல் பிரதமர் ஏப்.2இல் இந்தியா வருகை

ஜெருசேலம், மார்ச் 20- பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட், ஏப்ரல் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) இந்தியாவிற்கு வருகிறார் என்று அவரது  வெளிநாட்டு ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்திய-இஸ்ரேல் உறவு அர்த்தமுள்ள ஒத்துழைப்பின் அடிப்படையிலானது என்று கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்.  புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. இரு தலைவர்களும் கடந்த அக்டோபரில் கிளாஸ்கோ வில் நடந்த ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் (ஊடீஞ26) சந்தித்தனர். அப்போது பென்னட்டை இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி கேட்டுக்கொண்டிருந்தார். அதையடுத்து இந்தியா வரும் பென்னட் ஏப். 2- முதல் ஏப்.5- வரை இங்கு தங்கியிருப்பார் என பிடிஐ செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது.