world

img

உக்ரைன்- ரஷ்ய போர் களத்தில் இருந்து

உக்ரைனின் சபொரோசியே அணு மின் நிலை யத்தை ரஷ்யா தாக்கியதாகவும் இதனால் அங்கு அணு கதிர்வீச்சு அதிகரித்துவிட்டதாகவும் எனவே உலகமே பெரிய ஆபத்தை சந்திப்பதாகவும் அங்கு ரஷ்ய விமானங்கள் பறக்க மேற்கத்திய நாடுகளும் நேட்டோ வும் தடைவிதிக்க வேண்டும் எனவும் உக்ரைன் அரசாங்கம் கோரியது. ஆனால் அந்த மின்நிலையத்தை ரஷ்ய அதிகாரிகளும் அந்த மின் நிலைய உக்ரைன் அதி காரிகளும் இணைந்து நிர்வகித்து வருவதாகவும் கதிர் வீச்சு சாதாரண அளவுதான் இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. தேவை இல்லாமல் உக்ரைன் அர சாங்கம் பீதியை கிளப்பியதாக உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகள் கன்டனம் தெரிவித்துள்ளனர். 

ரஷ்ய ராணுவமும் அமெரிக்க ராணுவத் தலைமை யகம் பெண்டகனும் தமக்குள் பேசிக்கொள்ள விசேட தொலை தொடர்பு ஏற்பாடுகளை உருவாக்கி யுள்ளனர். போர் காலத்தில் தவறான புரிதல் காரணமாக உருவாகும் வீபரீதங்களை தடுக்க இந்த ஏற்பாடு. சிரியா போரின் பொழுதும் இது செயல்படுத்தப்பட்டது. 

ரஷ்ய ஜனாதிபதி புடினும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரானும் சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினர். ரஷ்ய ராணுவத்தின் இலக்குகள் நிறைவேறி வருவதாக புடின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. மோசமான நிகழ்வுகள் இனிமேல்தான் நடக்க உள்ள தாக மாக்ரான் கூறியதாகவும் சில தகவல்கள் உள்ளன.

சொந்த ஊருக்கு திரும்ப முயற்சிக்கும் தங்களை உக்ரைன் அதிகாரிகள், விலங்குகளைப் போல நடத்தினர் என பல கருப்பின மக்கள் புகார் தெரிவித்தனர். இதே புகாரை உக்ரைனில் உள்ள கிரீஸ் நாட்டு மக்களும் தெரிவித்தனர்.

உக்ரைனின் எதிர்காலத்தை உக்ரைன் மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அது மாறுபட்ட உக்ரைனாக இருக்கும் எனவும் ரஷ்ய அயலக உளவுத் துறை அதிகாரி செர்ஜி நெரிஷ்கின் தெரிவித்தார்.

உக்ரைனுக்காக போராட 16,000 வெளிநாட்டி னர் வந்துள்ளதாகவும் அவர்களை வரவேற்பதா கவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறு வருபவர்கள் பிடிபட்டால் ஐ.நா. சபை விதிகள் படி போர்க் கைதிகள் எனும் அந்தஸ்து அவர்களுக்கு  கிடைக் காது எனவும் அவர்கள் ஒன்றுக்கு பல முறை யோசித்து உக்ரைன் மண்ணில் காலடி வைக்க வேண்டும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம், ரஷ்யாவை சேர்ந்த எவராவது ரஷ்ய ஜனாதிபதியை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்கா லத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். புடின் பெயரை குறிப்பிடாமல் இதனை கூறினார். 

சிறந்த பழமையான மரங்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் ரஷ்யாவின் டுர்கெனவ் எனும்  யோக் மரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ரஷ்ய பூனைக்கு தடை!இன்று மரத்துக்கும் தடை!

உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது திட்டத்தில் இல்லை என ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.உக்ரைன் அல்லது ஜார்ஜி யாவை நேட்டோவில் சேர்ப்பதை ஜெர்மனி தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

ரஷ்யா மீது தேவையற்ற தடைகள் தொடர்ந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு ராக்கெட் இஞ்ஜின் தருவதை நிறுத்துவோம் என ரஷ்ய விண்வெளி மையம் ராஸ்கொஸ்மாஸ் எச்சரித்துள்ளது.

அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்காமல் நடந்து கொண்டதால் இந்தியா மீது வர்த்தக தடை விதிக்க வேண்டும் எனும் கூப்பாடு அமெரிக்காவில் வலுத்து வருகின்றது.

ஆப்பிள் அலைபேசி நிறுவனம் தனது ஆன்லைன் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது. பேருந்து தயாரிப்பு நிறுவனமான வால்வோவும் தனது உற்பத்தியை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது. 

ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை கள் தம்மையும் பாதிக்கும் என பல ஐரோப்பிய நாடு கள் தெரிவித்துள்ளன. எனினும் ரஷ்யாவுக்கு பாடம் புகட்ட இவற்றை செய்தாக வேன்டும் எனவும் கூறியுள்ளன.

உக்ரைனின் ஸ்டாரோகோஸ்டியன்டின்விர் ராணுவ விமான தளத்தை தனது படைகள் அழித்து விட்டதாக ரஷ்யா கூறுகிறது. 

விசா மற்றும் மாஸ்டர் கார்டு பணபரிவர்த்தனை அமைப்புகள் ரஷ்யாவில் தனது பணிகளை நிறுத்திவிட்டன.  இதற்கு மாற்றாக சீனாவின் யூனியன் பே எனும் அமைப்பின் உதவியுடன் ரஷ்யா எம்.ஐ.ஆர். பரிவர்த்தனை முறைகளை அமலாக்க முடிவு செய்துள் ளது. இது வெற்றி பெற்றால் அமெரிக்க நிறுவனங்க ளுக்கு மாற்றாக இது அமையும்.

அமெரிக்க  விமானங்கள் சீனக் கொடிகளை வைத்து கொண்டு ரஷ்யாவை தாக்க வேண்டும் எனவும் அப்படி செய்தால் ரஷ்யா சீனாவை தாக்கும் எனவும் நாம் ஜாலியாக உட்கார்ந்து அதனை ரசிக்கலாம் எனவும் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ள தாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. 

அமெரிக்காவிலிருந்து 3000 பேர் உக்ரைனுக்கு வந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட விருப்பம் தெரிவித்திருப்பதாக அமெரிக்காவின் உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு கூடுதலான சலுகைகளை அணுஆயுத ஒப்பந்தத்தில் தர வேண்டும் என ரஷ்யா திடீரென கோரிக்கை வைத்துள்ளது. இது அமெரிக்காவில் அதிர் வலைகளை உருவாக்கியுள்ளது. பைடன் அதிர்ச்சியில்! இந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் பைடன் நவம்பர் தேர்தல்களில் தனது ஜனநாயக கட்சியினரை வெற்றி பெற வைக்க முடியாது எனவும் பைடனின் செல்வாக்கு வீழ்ச்சி அடையும் எனவும் கூறப்படுகிறது. 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போலந்துக்கு ஓடிவிட்டதாகவும் அங்கு அமெரிக்க தூதர கத்தில் ஒளிந்துள்ளதாகவும்  உக்ரைனின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் இதனை மறுத் துள்ளது. எனினும் ரஷ்யாவில் புடின் மட்டுமல்லாது பல தலைவர்களும் ராணுவ அதிகாரிகளும் தொலைகாட்சி களில் பேட்டி தருகின்றனர். உக்ரைனில் ஏன் ஜெலன்ஸ்கி மட்டுமே பேசுகிறார் என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈரான் ஒப்பந்தத்தில் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டு கோள் விடுக்க இஸ்ரேல் பிரதமர் மாஸ்கோ பறந்துள்ளார்.  ரஷ்யாவும் அமெரிக்காவை அலறவைக்க முடியும் என சில நெட்டிசன்கள் அங்கலாய்க்கின்றனர்.

தன் தேசத்திலிருந்து ஓடிய மேற்கத்திய நிறுவனங்க ளுக்கு டாலரில் நிதி தராமல் ரூபிளில் தரும் உரிமை தனக்கு உள்ளது என ரஷ்யா அதிரடியாக கூறியுள்ளது.

தனக்கு ஜெட் விமானங்களை தருமாறும் அல்லது உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஜெல்ன்ஸ்கி அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளார். 

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ராஸ்கோஸ் மோஸ் பிரிட்டனின் அனைத்து விண்வெளி களங்களை செலுத்தும் பணிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

தொகுப்பு : அ.அன்வர் உசேன்