- ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடை பெற்ற பொருளாதார மாநாட்டில் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன என ரஷ்யா தெரிவித்துள்ளது.
- அமெரிக்கா வின் பொருளாதாரத் தடைகளை அனைவரும் ஏற்க வில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் தரும் ஆயுதங்கள் என்பது சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் செல் வாக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டது எனவும் அது வெற்றி பெறாது எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் கூறியுள்ளார்.
- 5ஆவது தலைமுறை போர் விமானம் எஸ்.யூ.57 ஐ உக்ரைன் போரில் ஈடுபடுத்தி வருவதாக ரஷ்யா பகீர் தகவல் தெரிவித்துள்ளது.
- ரஷ்ய வெறுப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கி றது எனவும் ஒடேசா நகரில் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரஷ்ய இலக்கியவாதி புஷ்கின் பெயரில் உள்ள தெருவின் பெயரை மாற்ற அனுமதிக்கப் போவது இல்லை எனவும் உக்ரைனின் ஒடேசா நகர மேயர் துக்கனோவ் கூறியுள்ளார். இவரது பதவியும் தலையும் தப்புமா?
- மேற்குலக நாடுகள் தரும் ஆயுதங்கள் உக்ரைன் மீண்டும் டான்பாஸ் பகுதியை ரஷ்ய படையிட மிருந்து கைப்பற்ற உதவும் என நேட்டோ தலைவர் ஸ்டோல்டென் பெர்க் கூறியுள்ளார்.
- உக்ரைனுக்கு சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்காதீர்கள் என சில ஐரோப்பிய நாடுகள் கூறுவது நேட்டோ வின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்!
- உக்ரைனின் டான்பாஸ் பகுதிக்கு சுயாட்சி உரிமை தரும் 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தங்கள் பெயரளவுக்கானவை எனவும் உக்ரைன் போருக்கு தயார் செய்து கொள்ள அவகா சத்தை உருவாக்கவே இந்த ஒப்பந்தங்களை பயன் படுத்தினோம் எனவும் முன்னாள் உக்ரைன் ஜனாதி பதி பொரொஷென்கோ கூறியுள்ளார்.
- அப்படியா னால் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை நியாயமா னதே என்பது நிரூபணம் ஆகிறது.
- உக்ரைனின் நிக்கலோவ் நகரில் ரஷ்ய மொழி தடை செய்யப்பட்டுள்ளது.
- இந்த நகரம் ரஷ்யப் படையின் தாக்குதலில் உள்ளது.
- ரஷ்ய நிலக்கரியும் பெட்ரோலும் இந்தியா வாங்கு வது பலமடங்கு அதிகரித்துள்ளது என ராய்ட்டர் செய்தி தெரிவிக்கிறது. எரிச்சலில் அமெரிக்கா!