- சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட “பிரன் ஹா3” எனும் நவீன ஆயுத வாகனத்தை உக்ரை னுக்கு தரலாம் எனும் டென்மார்க்கின் ஆலோசனை யை சுவிட்சர்லாந்து நிராகரித்துவிட்டது.
- ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நேரடி போரை உருவாக்க உக்ரைன் முயல்கிறது என ரஷ்யா வெளியுறவு அமைச்சர் லவ்ரவ் குற்றம்சாட்டியுள்ளார்.
- உக்ரைனையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கர்பாதியன் மலை ரயில் பாதையை ரஷ்ய ஏவுகணை கள் சரமாரியாக தாக்கியுள்ளன. இதன் வழியாகவே மேற்கத்திய ஆயுதங்கள் உக்ரைனுக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய் வதை இத்தாலி அதிகரித்துள்ளது. மக்களின் தேவை கள் முன் தடைகள் என்ன செய்ய இயலும்?
- ரஷ்யா மீதான தடைகள் காரணமாக ஆஸ்திரேலியா வில் 50 ஆண்டுகளில் இல்லாத எரிசக்தி நெருக்கடி உருவாகியுள்ளது என “தி சண்டே மார்னிங் ஹெரால்டு” எனும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி எந்த ஐரோப்பிய தேசமாவது ரஷ்ய எண்ணெய் வாங்கி னால் இறக்குமதி வரியை அதிகரிப்பது என ஒன்றி யம் முடிவு செய்துள்ளது.
- உக்ரைன் அகதிகளை வரவேற்கும் ஐரோப்பிய அரசாங்கங்கள் சிரியா/சூடான்/வளைகுடா ஆகிய தேசங்களிலிருந்து வரும் அகதிகளுக்கு தடை விதிக்கின்றனர்.
- மனிதர்களிடையே வேறுபாடு களை பார்ப்பதுதான் மேற்கத்திய ஜனநாயகமா? நாகரிகமா? எனும் கேள்விகளை சமூக செயற்பா ட்டாளர்கள் எழுப்புகின்றனர்.
- ரஷ்யா உபரியாக உள்ள உணவு தானியங்களை தர மறுக்கிறது என மேற்கத்திய தேசங்கள் குற்றம் சாட்டு கின்றன. ஆனால் ரஷ்யக் கப்பல்களை தடை செய்த பின்னர் எப்படி உணவு தானியங்களை அனுப்ப முடியும் என எதிர் கேள்வி முன்வைக்கிறது
- ரஷ்யா! ஒரு நாளைக்கு 80 முதல் 100 உக்ரைன் வீரர்கள் போரில் பலியாகின்றனர் எனவும் 500 பேர் காயம் அடைகின்றனர் எனவும் ஜெலன்ஸ்கி தெரி வித்துள்ளார்.
- ஆனால் இது போல 5 முதல் 10 மடங்கு வரை உக்ரைன் இழக்கிறது என ராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.