world

img

மியான்மரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்க வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

மியான்மரில் இராணுவத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்து ஆட்சியை கைப்பற்றியது. 

இதனை தொடர்ந்து ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் ராணுவம் வீட்டுக் காவலில் வைத்தது.

இந்நிலையில் இராணுவத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தை குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை ராணுவத்தினர் கைது செய்தனர். பத்திரிகையாளர்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில் கூறியதாவது 
“அனைவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல் அல்ல. மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

;