world

img

குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஒவ்வொன்றுக்கும் 15 ஆண்டுகள் சிறை..  சிக்கலில் ஆங் சான் சூயுகி...  

நைபிடாவ் 
ராணுவ ஆட்சி காரணமாக மியான்மர் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவரும், நாட்டின் முன்னாள் தலைமை ஆலேசகருமான ஆங் சாங் சூயுகி தற்போது வீட்டுச் சிறையில் உள்ளார். 76 வயதான சூயுகி நோபல் பரிசு பெற்ற சிறப்பு உடையவர். சிறப்புகள் பல இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 முக்கிய குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.  

இந்த 4 வழக்குககளில் ஒன்று நிரூபிக்கப்பட்டால் கூட சூயுகி -க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அப்படி என்றால் மொத்தம் 4 வழக்குக்கும் தண்டனை கிடைத்தால் வாழ்நாளின் மீதிப் பகுதியை சிறையில் கழித்தால் கூட போதாது.  
இந்நிலையில், சூயுகி மீதான 4 வழக்குகளுக்கான விசாரணை வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாக அந்நாடு ஜுன்டா (மியான்மர் நீதிமன்றம்) தெரிவித்துள்ளது.

;