world

img

பிரேசில் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு 

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 280 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் கடந்த செவ்வாயன்று முதல் கனமழை பெய்து வருவதால் 40 நகரங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனப் பேரிடர் மீட்புப் குழு தெரிவித்துள்ளது. 

மேலும், பஹியா மாகாணத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அம்மாகாண ஆளுநர் ருய் கோஸ்தா தெரிவித்தார். 

;