world

img

பிரான்ஸ் நாட்டில் ஐஎச்யூ என்ற புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு 

ஒமிக்ரானை விட தீவிரமான தொற்றைப் பரப்பும் ஐஎச்யூ என்ற புதிய கொரோனா திரிபை பிரான்ஸ் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

பிரான்ஸ்  நாட்டில் ‘ஐஎச்யூ’ என்ற புதிய கொரோனா திரிபை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய திரிபு ஒமிக்ரானை விட தீவிரமான தொற்றைப் பரப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி கண்டறியப்பட்டுள்ள இந்த தொற்றை உலக சுகாதார மையம்  இன்னும் உறுதி செய்யவில்லை. அறிவியல் ரீதியாக ஐஎச்யூ திரிபை B.1.640.2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 46 பிறழ்வுகளை இந்த திரிபு கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

பிரான்ஸ் நாட்டில் உள்ள துறைமுக நகரமான மார்சேயில் நகரில் சுமார் 12 பேர் இந்த புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 14 நாட்களில் 16,64,346 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

;