world

img

பாலஸ்தீன-இஸ்ரேல் யுத்தம் என்னதான் பிரச்சனை?

அரேபிய நிலப்பரப்பில் அமெரிக்காவின் ஏவுகணை தளங்களை அமைத்துக் கொள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடே இஸ்ரேல்.
அமெரிக்காவிலிருந்து குண்டு போட்டால் வந்து சேராதல்லவா?

வெறும் 80 லட்சம் மக்கள் தொகையையும் ஜெருசலேத்தை தலைநகராகக் கொண்ட நாடு. ஹீப்ருவும் அரபியும் மொழிகள். தற்போதைய நிலவரப்படி யூதர்கள் 77%,முஸ்லிம்கள் 16%.

மேற்கு ஆசியாவின் மத்தியதரைக்கடலின் கிழக்கில் அமைந்துள்ளது.வடக்கில் லெபனான், வட கிழக்கில் சிரியா, கிழக்கில் ஜோர்டான், தென் மேற்கில் எகிப்து ஆகிய நாடுகளே எல்லைகள்.

இஸ்ரேல் என்று பெயரிடப்படாத இந்த நிலப்பகுதியை கிபி 7 ம் நூற்றாண்டில் பைசாண் டைன் பேரரசன் ஹிராகிளியஸ் ஆண்டான். அதன் பிறகு 636 ல் முஸ்லிம்கள் வசம் இப்பகுதி வந்தது. ஆறு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள் ஆண்டனர்

1516 முதல் 20 ம் நூற்றாண்டு வரை ஒட்டோமான் பேரரசுக்கு உட்பட்ட பகுதியாக இது இருந்தது. இந்தக் காலங்களில் எல்லாம் இங்கிருந்து வெளியேறிச் சென்ற யூதர்கள் 1881,1904,1919,1924,1930 ஆகிய காலங்களில் பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினர்.

இவர்களை இங்கு குடியேற்றுவதில் இங்கிலாந்து முனைப்போடு இருந்தது.1922ல் 11% ஆக இருந்த யூதர்கள் எண்ணிக்கை 1945 ல் அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 33% மாக உயர்ந்தது. இதன் காரணமாக அராபியர்கள் 1936 முதல் 1939 வரை பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்

புதிதாக உருவாக்கப்பட்ட ஐநா சபை பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து 1947 டிசம்பர் 1 ல் தீர்மானம் நிறைவேற்றியது. இதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. நேரு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். ஆர் எஸ் எஸ் இதை அப்போதே ஆதரித்தது.

ஜெருசலேத்தை ஐநாவால் நிர்வகிக்கப்படுகிற சர்வதேச நகரமாகவும் அறிவித்தது. 1948 மே 14 அன்று யூதர்கள் தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் என்று பெயரிட்டு அறிவித்தனர். 1948 ல் அரபு-இஸ்ரேல் போர் தொடங்கியது. 1949 மே 11 ல் இஸ்ரேல் ஐநா சபை உறுப்பினராக இணைந்தது

யூதர்களின் தாக்குதலுக்குப் பயந்து 80% பாலஸ்தீன மக்கள் அகதிகளாக ஓடினர். ஆங்காங்கே கிடந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டதால் 1948 ல் 8 லட்சமாக இருந்த யூதர்கள் 1958 ல் 20 லட்சமாகப் பெருகினர். எகிப்தின் நாசர் தலைமையிலான அராபிய தேசியவாதிகள் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க மறுத்து போர் அறிவித்தனர்

1967 ல் ஆறு நாட்கள் நடந்த போரின் இறுதியில் இஸ்ரேல் வென்று, பாலஸ்தீனப் பகுதிகளான வெஸ்ட் பேங்க், சினாய்,கோலன், காஸா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொணடது. போரின் தோல்விக்குப் பிறகு 1967 ல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ( பி எல் ஓ ) உருவானது. ஆயுதம் தாங்கிய போரில் இறங்கியது

1977 ல் லிகுட் என்ற கட்சியைச் சேர்ந்த மெனகம் பிகின் இஸ்ரேல் பிரதமரானார். அதையொட்டி எகிப்து பிரதமர் அன்வர் சதாத் இஸ்ரேல் நாடாளுமன்றந்தில் பேசினார். ஒரு அரேபிய நாடு இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நிகழ்வு அதுதான்.

1987 முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எழுச்சி தொடர்ந்து நடைபெற்றது. 1993 ல் ஷிமன் பெரேசும் (இஸ்ரேல்)முகமது அப்பாஸ் ( பி எல் ஓ ) ஆஸ்லோ உடன்படிக்கையில் கையொப்பம் இட்டனர். அதன்படி வெஸ்ட் பேங்க்,காஸா பகுதிகளின் ஆளும் உரிமை பாலஸ்தீன தேசிய அமைப்பிற்கு கிடைத்தது.

ஆஸ்லோ ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதைத் தொடர்ந்து போர்கள் நடைபெற்று வந்தது. இன்றளவும் பதட்டம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. யாசர் அராபத்தின் மறைவுக்குப் பிறகு ஹமாஸ் என்ற இயக்கம் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினாலும் தற்போது வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிந்தது. இப்போது தொடங்கியுள்ளது.

தனது சொந்த நலனுக்காக மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டு லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று அழித்த ஒரு நாட்டிற்கு  இந்திய விடுதலைப்பிறகு 70 ஆண்டுகளில் எந்தப் பிரதமரும் சென்றதில்லை.
ஆனால் பாசிஸ்ட் மோடி 2017 ல் அங்கு சென்றார். உலகம் காறி உமிழ்ந்தது. 

இது அமெரிக்காவின் காலைக் கழுவிக் குடிக்கும் ஆர் எஸ் எஸ் அஜெண்டாக்களில் ஒன்றே.
உலகத்திற்கு கூட்டுச்சேரா கொள்கையை உயர்த்திப் பிடித்த இந்தியா, ஏகாதிபத்திய வெறியாட்டத்திற்கு வெண் சாமரம் வீசுகிறது என்று விமர்சிக்கப்பட்டது.

இஸ்ரேல் என்ற நாடு இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பிறகு
மேற்குஆசியாவின் எண்ணெய் வள நாடுகளை அடக்கி ஆள முனைந்த ஏகாதிபத்திய நாடுகளின் படைப்பே.

பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமான நாடு.16ம் நூற்றாண்டில் லட்சம் அரேபியர்களும்,5000 யூதர்களும் அங்கு வாழ்ந்ததாக அமெரிக்க என்சைக்லோப்பீடியா கூறுகிறது.

பழங்கால வரலாறு ஒன்றைக்காட்டி ஒருநாட்டைப் பிடிக்கலாம்
என்றால், செவ்விந்தியர்கள் கையில் அமெரிக்காவை ஒப்படைத்துவிட்டு ஐரோப்பிய வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும்.

இஸ்ரேலுக்கு எதிரான உலக நாடுகள் கண்டனம் முழக்கம் எழுப்ப வேண்டும். அந்த முழக்கத்தின் எளிய பங்களிப்பே இந்தப்பதிவு.

                                                                                                                                                                                                      -சூர்யா சேவியர்
 

;