world

img

பானிபூரி தண்ணீர் மூலம் காலரா பரவல்: காத்மாண்டுவில் விற்பனைக்குத் தடை!  

காத்மாண்டுவில் பானிபூரி விற்பனைக்கு அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.  

நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  

இந்நிலையில் பானிபூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த லலித்பூர் முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.    

பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா தொற்றை பரப்பும் பாக்டீரியா இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காலரா தொற்றுக்கு நேற்று மட்டும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலரா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து, லலித்பூர் பகுதியின் காவல்துறை உயர் அதிகாரி சீதாராம் ஹச்செது கூறுகையில், நகரின் கூட்டம் கூடும் இடங்கள், பானிபூரி விற்கப்படும் இடங்களை கண்டறிந்து அங்கிருக்கும் கடைகளை மூடப்படும் என அறிவுறுத்தப்பட்டு வருதாகவும், காலரா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

;