நெதர்லாந்தில் வரும் ஜனவரி 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று, டெல்டா வகை கொரோனாவை விட மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் அமலில் உள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளை, ஒமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டித்து, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு காபந்து பிரதமர் மார்க் ரூட்டே பேசியதாவது:
கிறிஸ்துமஸ் நேரத்தில் பொது மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி இதுவல்ல. குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் தாக்குவதால், பள்ளிகளுக்கு விடப்பட்ட இரண்டு வார விடுமுறை தற்போது மூன்று வாரமாக நீட்டிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை விதிக்க நிலையில் அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.