world

img

நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு 

ஆக்லாந்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையாக இந்த போதிலும் நியூசிலாந்து வைரஸை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து கொரோனா இல்லாத நாடாக காணப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, வைரஸ்பாதிப்பு இருந்தால், அவர்களை சரியான முறையில் கையாண்டு கொரோனா பரவலை தடுத்தது, நியூசிலாந்து அரசு.

கடந்த மாதம் வரை உள்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த  3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும் என நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

;