world

img

37 நாட்களில் 4 திருமணம், 3 விவாகரத்து செய்த நபர்


தை பை, ஏப்.16-
37 நாட்களில் நான்கு முறை திருமணம் செய்து, மூன்று முறை  விவாகரத்து செய்திருக்கும் விவகாரம் தைவான் நாட்டில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. 
தைவான் நாட்டில் உள்ள ஒரு  வங்கியில் கிளார்க் ஆக பணிபுரிந்து வருபவருக்கு  கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்திற்காக அந்த நபர் வங்கியில் 10 நாட்கள் அதாவது கடந்த ஆண்டு  ஏப்ரல் 7ல் இருந்து 16ம் தேதி வரை விடுமுறை எடுத்திருக்கிறார்.  பின்னர் 16ம் தேதி இரவு மனைவியை விவகாரத்து செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். மறுபடியும் 17ம் தேதி 2 வது  திருமணம் செய்ய வேண்டும் என 8 நாட்களுக்கு விடுமுறைக்கு விண்ணப்பித்து ஏப்ரல் 28ம் தேதி வரை விடுமுறை எடுத்திருக்கிறார். விடுமுறையின் இறுதி நாளாக 28ம் தேதி மனைவியை மீண்டும் விவகாரத்து செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  அடுத்த நாளே மீண்டும்  29ஆம் தேதி 3வது  திருமணம் செய்து கொண்ட கொள்ள  மே 11 வரை விடுமுறை வேண்டும் என கோரியிருக்கிறார்.  மே 12ம் தேதி மீண்டும் மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக தெரிவித்த அவர், மே 12ம் தேதி 4 வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கோரி மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பித்திருக்கிறார். அப்படி 37 நாட்கள்  4 முறை திருமணம் செய்து கொண்டதற்காக விடுமுறை எடுத்திருக்கிறார். 
திருமணத்திற்கான விடுமுறைக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பிற்கு விண்ணப்பித்திருக்கிறார். அதன்படி முதல் திருமணத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்த வங்கி நிர்வாகம் சந்தேகம் கொண்டு விசாரித்ததில் ஓரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து கொண்டதாக கூறியது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொழிலாளர் துறைக்கு சென்றிருக்கிறது. அதில் இது தொடர்பாக  தொழிலாளர் பணியகத்தின் ஆணையர், வங்கி ஊழியர் செய்த திருமணம் சரிதான். ஆனால்  ஒரு நபர் ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுமுறைக்கு விண்ணப்பிப்பது சரியானது அல்ல தவறு. அதற்கு  சட்டத்தில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க இடமில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வங்கி நிர்வாகம் தொழிலாளர் சட்ட விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நபருக்கு ரூ 52 ஆயிரத்து 800 ஐ அபதாரம் விதித்திருக்கிறது. இந்த சம்பவம் தைவான் நாட்டில் பேசு பொருளாக தற்போது மாறியிருக்கிறது. 
 

;