world

img

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.95 கோடியாக  உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தற்போது பல நாடுகளில் 2 வது அலை வீசுவதால் தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. 
இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.95 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,50,726 ஆக உள்ளது. 
கொரோனாவிற்கு 2,06,99,249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 9,65,43,921 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
 

;