world

மேலவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்

டோக்கியோ, டிச.4- ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காத தால், அது குறித்த பரிசீலனை யில், அடுத்த ஆண்டு நடை பெறவிருக்கும் மேலவைத் தேர்தலில் வெற்றி பெற வேண் டும் என்று இலக்கு நிர்ண யித்துள்ளது. ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட் டத்தில் ஜப்பான் தேர்தல் குறித்து விரிவான பரிசீலனை நடந் துள்ளது. அந்தக் கூட்டத்தில் மத்தியக்குழு அறிக்கையை அதன் தலைவர் ஷி கசுவோ முன்வைத்துப் பேசியது நேர லையாக ஒளிபரப்பானது. அந்த நேரலையை 55 ஆயி ரத்து 86 பேர் பார்த்துள்ளனர். அதில், அக்டோபர் 31 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் அனுபவத்தை எடுத்துக் கொண்டு அடுத்த கோடைக்காலத்தில் நடை பெறவிருக்கும் மேலவைத் தேர்தல் நல்ல முன்னேற்றத் தைக் காண வேண்டும் என்று கசுவோ குறிப்பிட்டுள்ளார்.

மூன்று முக்கியமான அம் சங்களை அவர் முன்வைத் தார். எதிர்க்கட்சி மற்றும் மக் கள் கூட்டணியின் பங்களிப்பு, இந்தக்கூட்டணி மேலும் முன் னேறிச் செல்ல என்ன பல வீனங்கள் களையப்பட வேண் டும் மற்றும் வாக்கு சதவிகித அடிப்படையில் பெறப்படும் தொகுதிகள் எண்ணிக்கை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட் சிக்கு ஏன் குறைந்தது ஆகிய மூன்று அம்சங்கள் பரிசீல னையில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதேபோல், இரண்டு இலக்குகளை மத்தியக்குழு, கட்சி உறுப்பினர்கள் மத்தி யிலும், மக்கள் மத்தியிலும் முன்வைக்க முடிவு செய்துள் ளது. ஒன்று, அரசியல் சட் டத்தை திருத்தி விட வேண் டும் என்று பிடிவாதம் பிடிப்ப வர்களுக்கு மேலவையில் மூன் றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் கிடைத்துவிடக் கூடாது. மற்றொன்று, ஆட்சி யில் உள்ள தாராள ஜனநாய கவாதக் கட்சி மற்றும் கொமேய் கட்சி ஆகிய இரண்டும் மேல வையில் சிறுபான்மைக் கட்சி களாக இருக்க வேண்டும். இந்த இரண்டையும் இலக்கா கக் கொண்டு எதிர்க்கட்சிகள்  கூட்டணி பணியாற்ற வேண் டும். இதற்கு மேலவைத் தேர் தலில் கூட்டணி வெற்றி பெறு வது அவசியம் என்று ஷி கசுவோ குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டு ஜூலை யில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. “கோடைக் காலத்தில் நடைபெறும் மேல வைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியோடு நமது நூற் றாண்டு விழாவைத் துவக்கு வோம்” என்று ஷி கசுவோ வேண்டுகோள் விடுத்தார்.

;