world

img

ஜப்பானில் பனிப்புயல்....

டோக்கியோ:
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விரைவு நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த சுமார் 130க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. 

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கார்களில் சிக்கிக்கொண்ட 200 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.ஜனவரி 19 நண்பகல்வீசிய இந்த அதிதீவிர பனிப்புயல் மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகு நெடுஞ் சாலையை போர்வையை கொண்டு மூடியதுபோல் மாற்றிவிட்டது.ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் சேவையும் இந்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள் ளது. டோஹோகு பிராந்தியத்தில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டு களுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் இந்த ஆண்டு பனிக்காலம் தீவிரமாக காணப்படுகிறது. கடந்த மாதம், கனேட்சு விரைவு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பனிப்பொழிவில் 1,000க்கும் மேற்பட்ட வண்டிகள் 2 நாள்களுக்கு சிக்கித் தவித்தன.

;