world

வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும்

 உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா,ஜூலை 13- கொரோனா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசி களை போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இரு வேறு பட்ட தடுப்பூசி டோஸ்களை செலுத்திக் கொண்டால் அதிக பாதுகாப்பு கிடைப்ப தாக  தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. இதுகுறித்த சில ஆய்வுகள் நடந்திருப்ப தாகவும் அவ்வப்போது செய்திகள் வெளி வருகின்றன. இரு டோஸ் ஆஸ்ட்ராஜென்கா தடுப் பூசியைச் செலுத்திக் கொண்ட பிறகு, வேறொரு தடுப்பூசியை பூஸ்டராக செலுத்திக் கொண்டால் அவர்களுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகலாம் என பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்தது. ஆனால் இதனை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செள மியா சுவாமிநாதன் கூறுகையில், பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை இன்னமும் முடிவுக்கு வர வில்லை. மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப் பட்டு வருகிறது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம். இப்போதுள்ள நிலையில் கொரோ னா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதுவரை ஆய்வுகள் முடிந்து நமக்கு விடை கிடைக்கவில்லை. உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே இரு ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். கொரோனா வுக்காக இருவேறு தடுப்பூசிகளை போட் டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;