world

img

சீன விண்கலம் எடுத்த  செவ்வாய் கிரக படம் வெளியீடு...

பெய்ஜிங்:
சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில்எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.இதற்கிடையில் சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் மே  15  ஆம் தேதி செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமிராக்கள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமிராக்கள்  செவ்வாய்கிரகத்தில் புகைப்படங்களை எடுத்துள்ளது. அந்த புகைப்படங்களை சீனவிண்வெளி மையம் மே 20 வியாழனன்று வெளியிட்டது.

;