world

img

வேவு விமானம் அழிப்பு

சனா, மே 26- தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து கொள்ள முயன்ற சவூதி அரேபியாவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஏமன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதை ஏமன் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சரீ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிகாலையில் சவூதி அரேபிய விமானப்படையின் வேவு விமானம் ஒன்று ஏமன் எல்லைக்கருகில் பறந்து கொண்டிருந்தது. எங்கள் பகுதிக்குள் நுழைய முயன்ற அந்த ஆளில்லா விமானத்தை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்” என்றார். ஏமனுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவவே அந்த ஆளில்லா விமானம் ஏவப்பட்டதாகக் கூறிய அவர், அத்தகைய செயல்பாடுகள் எங்கள் எல்லைக்குள் நடப்பதை ஏமன் ராணுவம் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். சனா, மே 26- தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து கொள்ள முயன்ற சவூதி அரேபியாவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஏமன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதை ஏமன் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சரீ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிகாலையில் சவூதி அரேபிய விமானப்படையின் வேவு விமானம் ஒன்று ஏமன் எல்லைக்கருகில் பறந்து கொண்டிருந்தது. எங்கள் பகுதிக்குள் நுழைய முயன்ற அந்த ஆளில்லா விமானத்தை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்” என்றார். ஏமனுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவவே அந்த ஆளில்லா விமானம் ஏவப்பட்டதாகக் கூறிய அவர், அத்தகைய செயல்பாடுகள் எங்கள் எல்லைக்குள் நடப்பதை ஏமன் ராணுவம் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;