world

img

சீன மக்கள் தொகை உயர்வு....

பெய்ஜிங்:
சீனா தனது நாட்டின் மக்கள் தொகையை குறைக்க ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற திட்டத்தை 1980 இல் அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து பணி செய்யும் ஆற்றல் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதனால் 2015 இல் ‘நாம் இருவர்நமக்கு இருவர்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி யது. எனினும் 2017 - 18 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது.இந்நிலையில் 2019இல் மக்கள்தொகை 47 லட்சம் அதிகரித்து 140 கோடியை தாண்டியது. கடந்த 2020இல் மக்கள் தொகை மேலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. எனினும் பணி செய்யும் திறன் உள்ளவர்களை ஒப்பிடும்போது 2035இல் சீனாவை விட இந்தியாவில் 12 கோடி பேர் அதிகமாக இருப்பார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

;