world

img

கியூபா பரிசோதனை வெற்றி

ஹவானா, டிச.8- கொரோனா தொற்றிலிருந்து பாது காக்கும் வகையில் கியூபா தயாரித்து வரும் தடுப்பூசிகள் அடுத்த கட்ட பரிசோத னையிலும் வெற்றி பெற்றுள்ளன. கியூபாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி கள் கிட்டத்தட்ட அனைத்து லத்தீன் அமெ ரிக்க நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வரு கிறது. உயிர் காக்கும் மருந்தாக அது செயல்படுகிறது என்று பல நாடுகளின் மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இந்நிலையில் குழந்தை கள் மற்றும் பதின்பருவத்தினருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான பரி சோதனையில் கியூபா ஈடுபட்டிருந்தது.

அதன் பரிசோதனை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 99.15 விழுக்காடு பாதுகாப்பை அப்தலா தடுப்பூசி வழங்கும் என்றும், 12 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 98.28 விழுக்காடு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பாக எந்தவித பாதுகாப்பு உடலில் இருந்ததோ, அதைவிட நான்கு மடங்கு அதிகமான அளவில் நோய்த்தடுப்பு இருப்பது சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனையில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் பங்கேற்றனர். 3 மாத காலம் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அக்டோபர் 13 ஆம் தேதியே இந்தப் பரி சோதனைகள் நிறைவடைந்து விட்டன. இந்தப் பரிசோதனையின்போது எதிர் மறை விளைவுகள் இருப்பதையும் வல்லு நர்கள் கண்டறிந்தனர். ஆனால் அந்த  எதிர்மறை விளைவுகளில் 80 விழுக்காட்டி ற்கும் மேற்பட்டவை பாதிப்புகளை ஏற்படுத் தாதவையாகும். ஏற்கனவே வயது வந்தவர்களுக்கான பரிசோதனைகளில் கிடைத்த சாதகமான அம்சங்கள் இதிலும் கிடைத்துள்ளன.

அதனால் இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும், இளம் வயதின ருக்கும் பாதுகாப்பானதே என்று வல்லு நர்கள் கூறுகிறார்கள். வயது வந்தவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான பரி சோதனையும் நடைபெற்றுள்ளது. இதி லும் அப்தலா தடுப்பூசியையே செலுத்த விருக்கிறார்கள். அவர்களுக்கான பரி சோதனையில் 92.98 விழுக்காடு பலன ளிக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

;