world

img

ஒரே வாரத்தில் 17 ஆயிரம் நில அதிர்வுகள்!

"ஜஸ்லாந்து நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பாவில் சிறியதீவு நாடாக உள்ள ஐஸ்லாந்து பல எரிமலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 ஆயிரம் முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

;