world

img

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.  

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா., ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

இதில், வட ஐரோப்பிய நாடான பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடம் வகிக்கிறது. டென்மார்க் இரண்டாமிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகியன முறையே மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாமிடங்களில் உள்ளது. 

மத்திய கிழக்கு நாடான லெபனான், தென் அமெரிக்க நாடான வெனிசுலா, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.அமெரிக்காவுக்கு 16வது இடமும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு 15வது மற்றும் 20வது இடமும் கிடைத்துள்ளன.

;