world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி 

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலி யுறுத்தி 10 ஆயிரத்துக்கும் அதிகமான அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.அவர் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ஆளும் ஷெபாஸ் ஷெரீப்பின் கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் நடத் தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ வேட்பாளரானார்  கமலா ஹாரீஸ்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வாகியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கடும் விமர்சனத்திற்கு பிறகு தேர்தலில் இருந்து விலகி னார்.அதனை தொடர்ந்து கமலா ஹாரிஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட நிலையில் உட்கட்சி தேர்தலில் வெற்றி  பெற்று செவ்வாய்கிழமையன்று அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

புதிய செயற்கைக்கோள்களை  ஏவிய சீனா 

உலகளாவிய இணைய பயனாளர்களுக்கு இணைய சேவை வழங்கும் நோக்கத்துடன் புதிய செயற்கைக் கோள்களை சீனா ஏவியுள்ளது. யுவான் செயற் கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து  ஜி60   எனும் செயற்கைக்கோள்கள் தொகுப்பு திட்டத்தின் முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமையன்று  மொத் தம் 18 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இதற்கு முன்பாக பரிசோதனை செய்வதற்காக  5 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.