world

img

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூடான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சூடான் முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சூடான் நாட்டின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமர் சாதிக் அல் மஹ்தி(84). 1989ம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்ட ராணுவ ஆட்சியால் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். எனினும் அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்பட்ட மஹ்தி கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹ்தி சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலை உயிரிழந்தார். 

;