world

img

இஸ்ரேலில் மத விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

இஸ்ரேலில் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில் இன்று காலை லாக் பி  ஓமர் நினைவு தினத்துக்காக அவருடைய கல்லறை பகுதியில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர்.  இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 44  பேர் சிக்கி பலியானார்கள்.  100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.  மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர்.  
இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் மேலும் பல சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்து. இந்நிலையில் கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை.  இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;