world

img

இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங் இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வீதியில் இறங்கி மக்கள் போராடி வரும் நிலையில், இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறை மற்றும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே நேற்று முன்னாள் பிரதமர் மற்றும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள 73 வயதான ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதை ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.