world

img

முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு மீண்டும் அடிக்கல்....

யாழ்ப்பாணம்:
பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பலியான தமிழா்களின் நினைவாக, அங்குள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போா் நினைவிடம் அமைக்கப்பட்டது.
இந்த நினைவிடத்தை இடிக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தா் சிவகொழுந்து ஸ்ரீசத்குணராஜா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதையடுத்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும்கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நினைவிடம் இடிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோந்தவா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்திலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் மாணவர்கள், இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்படும் என்று துணை வேந்தர் உறுதியளித்தார்.இதைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைப்பதற்காக துணைவேந்தர் திங்களன்று அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர், துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

;