இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தன்னெழுச்சியாக திரண்டு பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில், அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க பணமின்றி, மக்கள் பசியும், பட்டியுமாக தவித்து வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி கொழும்பு காலி முகத்திடலில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நெருக்கடிக்குள்ளான துறைகளை மீட்டெடுக்க வேண்டும். ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் தொடர்ந்து 9-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது, ஆட்சியாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.