கொழும்பு, மே 23- இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அத்தியா வசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மகிந்த ராஜ பக்சே பதவி விலகினார். 4-ஆவது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இந்நிலையில், விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர் கள் பதவியேற்றுள்ளனர். இதன்படி, விவ சாயம், வனவிலங்கு அமைச்சராக மஹிந்த அமரவீர, ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக பந்துல குணவர்தன, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல, கடற்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, தொழில்துறை அமைச்சராக ரமேஷ் பத்திரண, புத்த சாசனம், சமயம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சராக விதுர விக்ரமநாயக்க, சுற்றா டல் துறை அமைச்சராக நஷீர் அஹமத், விளை யாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக அநுருத்த ரணசிங்க ஆகி யோர் பதவியேற்றுக் கொண்டனர். ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.