world

எதிர்பார்த்ததை விட மோசம்

பெர்லின், மே 27- சுற்றுச்சூழல் மாற்றங்கள் எதிர்பார்த்ததை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தங்கள் நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய ஜி-7 நாடுகள் ஜெர்மனியில் கூடியுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அமைச்சர்கள் இதில் பங்கேற்கிறார்கள். எரிபொருள், தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் அமைச்சர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் பூமி வெப்பமயமாதலை 1.5 செல்சியசிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை மீண்டும் உறுதி செய்யவிருக்கிறார்கள்.  அதே வேளையில், இலக்கை அடைவதற்கான தயாரிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் பரிசீலிக்கப் போகிறார்கள். உடனடியாக செய்ய வேண்டிய  பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றிற்கு முன்னு ரிமை கொடுப்பது பற்றிய ஆலோசனையும் நடக்கிறது.

;