வறுமை ஒழிப்பில் சாதனை
2022 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி இலக்குகள் அறிக்கை ஜூலை 7 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதன்படி, நடப்பாண்டில் 7 கோடியே 50 லட்சம் பேர் முதல் 9 கோடியே 50 லட்சம் பேர் வரையில் புதிதாக கடுமையான வறுமையால் நடப்பாண்டில் பாதிக்கப்படப் போகிறார்கள். வறுமை ஒழிப்பில் சீனாவின் சாதனையால் ஒட்டுமொத்த உலகின் வறுமை பாதிப்பு குறைந்துள்ளது. நவம்பர் 23, 2020 அன்று, சீனா வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 10 கோடிப் பேரை கடுமையான வறுமையில் இருந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் சீனாவில் கடுமையான வறுமை என்பது ஒழிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா, ஜூலை 29- உலகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் சீனாவின் பங்களிப்பு வியக்கத்தக்கது என்று உலகப் பொரு ளாதாரக் கழகத்தின் தலைவர் போர்ஜ் பிரெண்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரம் குறித்துக் கருத்து தெரிவித்த போர்ஜ் பிரெண்ட், ‘‘சீனாவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அது உலகின் மற்ற நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனா இருப்ப தால் இந்தத் தாக்கம் தொடரும். சீனா மற்றும் அந்நாட்டின் நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் வளர்ச்சியை மீட்டெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு நன்றாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டில் முதல் அரை யாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 விழுக்காடு விரி வடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி வேகம் இழந்திருக்கிறது. இதன் தாக்கம் சீனா மீதும் இருக்கும். அதையும் மீறி சீனாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது நார்வே நாட்டின் முன்னாள் வெளியுற வுத்துறை அமைச்சரும், தற்போது உலகப் பொருளாதாரக் கழகத்தின் தலைவ ராகவும் இருக்கும் போர்ஜ் பிரெண்ட் குறிப்பிடுகிறார். ஐ.எம்.எப் (சர்வதேச நிதி அமைப்பு) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் வெளியான கணிப்பை விட 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி முறையே 0.8 மற்றும் 0.2 விழுக்காடு குறைவாகவே இருக்கப் போகிறது. இந்த நெருக்கடியிலும் பெரும் சரிவு ஏற்படாமல் உலக நாடுகளை சீனா பாதுகாத்திருக்கிறது என்கிறார் போர்ஜ் பிரெண்ட். லாபத்தில் ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவின் சந்தை உள்நாட்டு நிறு வனங்களுக்கு மட்டுமில்லாமல் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் பலனைத் தந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகக் கவுன்சிலின் அறிக்கையை சுட்டிக்காட்டும் பிரெண்ட், ‘‘2021 ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐரோப்பிய நிறுவனங்கள் லாபத்தைச் சம்பாதித்துள்ளன. சீனா வின் சந்தை அவர்களுக்கு பெரும் அள வில் உதவியுள்ளது’’ என்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் வேறு எந்த நாடும் காணாத வளர்ச்சியை சீனா அடைந்திரு க்கிறது. வறுமை ஒழிப்பிலும் பெரும் சாத னையைப் படைத்திருக்கிறது. உலக வளர்ச்சியில் இவையனைத்தும் சாதக மான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.