world

உலகச் செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ள தாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந் நாட்டு அரசு வெளியிட்டுள்ள விபரங்களின்படி நவம்பர் 2021ல் வேலைவாய்ப்பின்மை 6 விழுக்காடாக இருக்கி றது. கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட இழப்பிலிருந்து கனடா மீண்டிருப்பதாகக் கூறுகிறார் கள். கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பாக, 5.7 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், தொற்றுக் காலத்தில் 13.7 ஆக உயர்ந்திருந்தது. 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள துனீசியாவிற்கு தொடர்ந்து மருத்துவ உதவிகளை சீனா அளித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றுக் காலத்தில் பல மருத்துவத் திட்டங்களை சீனா நிறைவேற்றி உள்ளது. அதன் 25வது திட்டம் நிறைவ டைந்ததையொட்டி சீன மருத்துவத்துறைக்கு துனீசியா அரசு விருது வழங்கிக் கவுரவம் செய்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 1,500 அறுவை சிகிச்சைகளை சீன மருத்து வக் குழு மேற்கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், தன்னை சில நாட்க ளுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரஸ் அறிவித்துள்ளார். 72 வய தாகும் அவர், தனது நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்தி ருக்கிறார். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை யின் கூட்டத்தில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற் பட்டிருக்கிறது.

;