அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐஐடி மாணவர்கள் வளாக நேர்முகத் தேர்வின் முதல் நாளில் 164 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், அவர்களில் 11 பேருக்கு ரூ.1 கோடி ஆண்டுச் சம்பளத்திற்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஐஐடி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் பணம் பெற்றதாகக் கூறிய குற்றச்சாட்டில், திரி ணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா வை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறி முறைக் குழு பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடி தம் எழுதியுள்ளார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சரத் பவா ரின் தேசியவாத காங்கிரஸ் கையில் இருக்கும் முக்கிய தொகுதிகள் உட்பட 11 தொகுதிகளில் போட்டி யிடப் போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் அறிவித்துள்ளார்.
ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் அயோத்தி யில் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் விரைவில் (இம்மாத இறுதிக்குள்) செயல்படத் தொடங்கும் என்று ஒன்றிய விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூசே தொடர்ந்த அவதூறு வழக்கில் சிவசேனா (யுடிபி) தலை வர் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டு, வழக்கு விசாரணையை பிப். 3க்கு (2024) ஒத்திவைத்தது மாலேகான் நீதிமன்றம். நாசிக் மாவட்டத்தில் கிர்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் ரூ.178 கோடி ஊழலில் ஈடுபட்டதாக தாதா பூசே மீது சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் அம லாக்கத்துறை சனியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை பகுதி யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டு கர்ப்பமான 17 வயது சிறுமி தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். திருமணம் தொடர் பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால் இந்த தற்கொலை நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சாங்ரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியின் விடுதி உணவகத்தில் சாப்பிட்ட 18 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.